ஓசூர், செப். 28- தந்தை பெரியார் 148 ஆவது பிறந்தநாள் கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். திராவிடர் கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வம் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டுகளையும் அதன் சிறப்புகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இரா.செயசந்திரன்,ச.எழிலன், மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேரறிவு, செயலாளர் மதிவாணன்,மேனாள் சட்டக்கல்லூரிகள் திராவிட மாணவர் கழகத் துணை அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி, திமுக பொறியாளர் அணி மாநில துணை அமைப்பாளர் ஞானசேகரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம்,35 வார்டு திமுக வட்ட செயலாளர் வடிவேல்,அதிமுக ஜீவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
