பகுத்தறிவாளர்கள் – யார்?
சுயமரியாதைக்காரர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள்; உலகத்தை யும் நடுநிலை நின்று ஆழமாய்ப் பார்ப்பவர்கள். படித்த அறிவாளிகள், பண்டிதர்கள் முதலிய யாரை யும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர்த்தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவடைந்தவர்கள். நம் மக்கள் எல்லா மக்களும் அப்படி ஆக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இதில் என்ன குற்றம் உள்ளது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
