
செங்கல்பட்டு, செப். 28- தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு நகரத்தின் நுழைவு வாயிலான செங்கல்பட்டு-காஞ்சிபுரம் புறவழிச் சாலை சந்திப்பில் (பாலத்தின் கீழ்) நேற்று (27.09.2026) அன்று காலை 7:00 மணி அளவில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
பெரியார் நடை செங்கல்பட்டு சார் பதி வாளர் அலுவலகம் வழியாக பேருந்து நிலையத்தைக் கடந்து புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை உடன் நிறைவு பெற்றது.
நிகழ்வுக்கு செங்கல்பட்டு மாவட்டக் கழகத் தலைவர் அ.செம்பியன், மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன், தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் கழக மாவட் டத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்டச் செயலாளர் தமிழினியன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டக் காப்பா ளர் சமத்துவமணி, சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் பெருந் தொண்டர் பி.சி.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா கருணாகரன், பூ.சுந்தரம், தாம்பரம் சு.மோகன்ராஜ், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ. இரா.சிவசாமி, செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் வி.வசந்தன், இளைஞர் அணிச் செயலாளர் செ.வினோத் குமார், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியா னந்தம், மகளிர் அணித் தோழர்கள் நூர்ஜஹான், உத்ரா, தேவி அனிதா, பெரியார் பிஞ்சுகள் அ.மகிழ்மாறன், அ.மகிழினி உள்ளிட்ட ஏராளமான செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் கழக மாவட் டத்தை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
