மும்பையில் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மும்பை, செப்.23–- மானுடம் போற்றும் மனிதநேயர் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

செப்டம்பர் 17- அன்றுகாலை 10-00 மணி அளவில் தாராவி தந்தை பெரியார் சதுக்கத்தில் சிறிய அளவு மேடை அமைத்து  பெரியார் படம் அலங்கரிக்கப்பட்டு மும்பை திராவிடர் கழகத் தலைவர்
பெ.கணேசன் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது!

தொடர்ந்து தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.

பொது மக்கள் 100 பேருக்கு லட்டுகள் வழங்கப்பட்டன!

மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அய்யா  விழா தொடங்கியது விழாவுக்கு மும்பை திராவிடர் கழக தலைவர்
பெ. கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை திராவிடர் கழக துணைத் தலைவர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக் கூறி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் என்.வி. சண்முகராசன்,  முலூண்ட் ஆ.பாலசுப்பிரமணியன், மும்பை திராவிடர் கழகத் தோழர் சோ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாத் தலைவர் தமது உரையில் பெரியாருக்கு விழா எடுக்கிறோம் என்றால் பெரியாரால் நாம் சுயமரியாதை உணர்வைப் பெற்று மானத்தோடும், அறிவோடும்  வாழ்கிறோம் என்பதற்கான நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு தான்! என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மனிதநேய இயக்கத்தை சேர்ந்த சங்கர்திராவிடர், தமிழ் இலக்கியக் கூடம் கவிஞர் தமிழ்நேசன், மகிழ்ச்சி மகளிர் பேரவை அமைப்பைச் சார்ந்த தோழர் க.வளர்மதி, மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா, அம்பேத்கர் இயக்கத்தை சார்ந்த மராத்தியத் தோழர் சஞ்சய், மும்பை மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற அய்.ஆர்.எஸ். அதிகாரி அன்பழகன் பொற்கோ ஆகியோர் உரைக்குப் பின் மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர்
அ.இரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார். அவர்தம் உரையில் தமிழ்நாட்டு நிகழ்கால அரசியல் நிகழ்வுகளையும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பையும் நினைவு கூர்ந்து பேசினார். இறுதியாக மும்பை திராவிடர் கழகச் செயலாளர் ஜே.வில்சன் நன்றி கூறினார்.

வக்கோலா பகுதி திமுக தோழர் சேலம் மா.சீனிவாசன்,
பா.அன்பில் ரஞ்சன், பூ.சு.அழகு ராஜா, க.அண்ணா துரை மகேந்திரன் அண்ணாமலை, சுபாஷினி, மகிழினி, கோமதி, தாராவி கிளைக் கழகத் தலைவர் அய்.செல்வராஜ், தாராவி கிளைக் கழகச் செயலாளர்  மு.கணேசன், மும்பை மாநகர திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் க.ராஜன் சு.கதிரவன், க.அறிவுமதி, இ.இளவேனில், இ.இனியா, தமிழ் ஓட்டுநர் சங்கத் தலைவர் ரவி ரஜினி, க.சஞ்சய், க.விக்ரம், தோழர் குப்புசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

உணவு முறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் விதமாக வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும்  மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி உணவுகள் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டன!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *