வரலாற்றின் அரிய பக்கங்களைப் புரட்டிக்காட்டிய கழகத் தலைவர்!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெருவளப்பூரை, ‘பெரியார் வளப்பூராக’ மாற்றிய தோழர்களுக்கு வாழ்த்துகள்! இலால்குடி இயக்க வரலாற்றில் ‘‘தியாக மாவட்டம்!!’’
சுயமரியாதைத் திருமணச் சட்டம் வருவதற்கு
விதை போடப்பட்டதற்கு பெருவளப்பூரின் பங்கு முக்கியம்!

திராவிடர் கழகம்

இலால்குடி, செப். 21 பெரியார் பிஞ்சுகளிலிருந்து முதியோர் வரை ஊரே இயக்க உணர்வோடு இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘பெருவளப்பூரை பெரியார் வளப்பூராக மாற்றியமைத்திருக்கும் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துகள்’’ என்றும், ‘‘இலால்குடி மாவட்டம் ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்டத்தில் தியாகம் செய்த மாவட்டம்’’ என்றும், ‘‘தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில், ‘‘சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை கொண்டு வருவேன்’’ என்று அண்ணா முன்மொழிந்த ஊர் இதே பெருவளப்பூர்தான்’’ என்றும், பல்வேறு இயக்க வரலாற்றைச் சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற வீரர்களின் நினைவாக…

இலால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றி யம், பெருவளப்பூரில், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமாக நேற்று (20.09.2026) மாலை 6 மணிக்கு, இலால்குடி பெருவளப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற வீரர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு இலால்குடி மாவட்டத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜா தலைமை தாங்கி உரையாற்றினார். மகளிரணித் தோழர் கு.காயத்திரி அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மாவட்டக் காப்பாளர்கள் தே.வால்டேர், ப.ஆல்பர்ட், ஆ.அங்கமுத்து, புள்ளம்பாடி ஒன்றிய துணைத் தலைவர் க.இராமன், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் சி.வீரமணி, தொழிலதிபர் பா.திவ்யநாதன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சா.இசைவாணன், பெருவளப்பூர் ஒன்றிய அமைப்பாளர் சா.பன்னீர்செல்வம், பெருவளப்பூர் தோழர்கள் இரா.அருணாசலம், லூ.எட்வின், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் வி.சி.வில்வம், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, செயலாளர் விஜயேந்திரன், துறையூர் மாவட்டத் தலைவர் மணிவண்ணன், இலால்குடி மகளிர் பாசறைத் தலைவர் குழந்தை தெரசா, மாவட்ட துணைத்தலைவர் புள்ளம்பாடி மு.திரு நாவுக்கரசு, பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

தொடர்ந்து, இயக்கப்புத்தகங்களை அறிமுகம் செய்வித்து, வாங்கிப் பயன்பெறுமாறு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா,ஜெயக்குமார் அறி வித்து உரையாற்றினார். அடுத்து, மாவட்டத் துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.  தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதினி உரையாற்றினார். அவர் தமது உரையில், தன்னையே “விதவன்” என்று விளித்து, தமிழுக்கு ஒரு புதிய சொல்லையே தந்தை பெரியார்தான் தந்தார் என்று விவரித்தார். இதனைத் தொடர்ந்து, 87 வயதான் மாவட்டக் காப்பாளர் ப.ஆல்பர்ட் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோருக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்.

பெரியார் உலகத்திற்கு நிதி!

மாவட்டக் காப்பாளர் தே.வால்டேர் – மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் வா.குழந்தை தெரசா, இருவரும் இணைந்து, அவர்கள் குடும்பத்தின் சார்பாக, 1,00,000/- பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர். கழகத் தலைவர் அவர்களுக்கு, குணசுந்தரி சித்தார்த்தன் மரியாதை செய்தார். தொடர்ந்து, பெருவளப்பூர் தோழர்கள் இணைந்து, ரூபாய் 1,11,000/- பெரியார் உலகம் நிதியாக கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர். மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த தோழர்களுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக கழகத் தோழர் பொற்செழியன் கழகப் பாடல்களை பாடினார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

கழகத் தலைவர்
ஆசிரியர் உரை!

அவர் தமது உரையில், பெருவளப்பூர் ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களான, சி.வெங்கடாசலம், அ.சிதம்பரம், க.மாணிக்கம், அ.ஆலப்பன், க.முத்துசாமி, மருத்துவர் பாலகிருஷ்ணன், இரா.சாமிநாதன், அழ கப்பன், குமாரசாமி, மா.முத்துசாமி, புரட்சி பெருமாள் ஆகியோரை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து, ”பெரியா ருடைய ஒவ்வொரு கருத்தும், போராட்டமும் நமது மானத்தை மீட்டுக்கொடுத்திருக்கிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லி விட்டு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் தோற்றம் குறித்த வரலாற்றை விவரித்தார். ‘‘அதற்கு விதை போட்டது பெருவளப்பூர் மாப்பிள்ளையின், திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த திருமணம்தான்” என்று, பலத்த கைதட்டல்க ளுக்கிடையில் அருகில் அமர்ந்திருந்த பெரியார் பெருந்தொண்டர் தோழர் அருணாச்சலத்தை சுட்டிக்காட்டினார். அவரும் நிமிர்ந்து அமர்ந்தார். தொடர்ந்து, பெரியார் பிஞ்சுகளிலிருந்து முதியோர் வரை ஊரே இயக்க உணர்வோடு இருப்பதைச் சுட்டிக்காட்டி, ”பெருவளப்பூரை பெரியார் வளப்பூராக மாற்றியமைத்திருக்கும் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துகள்” என்றும், ”இலால்குடி மாவட்டம் ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்டத்தில் தியாகம் செய்த மாவட்டம்” என்றும் சுட்டிக்காட்டிவிட்டு, திராவிடர் இயக்கம் ஏன் வேண்டும்? பெரியார் ஏன் வேண்டும்? என்று கேட்டு, ஜாதி ஒழிப்பின் அவசியம் அதன் தோற்றம் ஆகியவற்றை விவரித்து, ‘‘மனுதர்மம்’’, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ ஆகிய இரண்டு புத்தகங்களை கையில் வைத்துகொண்டு அதன் வாயிலாக, ஜாதியின் தோற்றம், ஜாதி ஒழிப்பின் அவசியம் பெரியாரின் தொண்டு ஆகியவற்றை விவரித்து, பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்ற கருத்தமைய உரையாற்றிவிட்டு, தமதுரையை நிறைவு செய்தார். நிறைவாக, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.வான்முடி வள்ளல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் இலால்குடி, திருச்சி மாவட்டங்களி லிருந்து இயக்கப் பொறுப்பாளர்களும், விடுதலைபுரம், பெருவளப்பூர் ஊர் இயக்கத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் பெருமளவில் கலந்துகொண்டு கழகத் தலைவரின் உரையை செவிமடுத்தனர். இயக்கப் புத்தகங்களையும் மக்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர் என்பதும் குறிப்பி டத்தக்கது. தாம்பரம் மாவட்டத்திலிருந்து திருச்சியில் காலையில் நடைபெற்ற பெரியார் நடையில் கலந்துகொள்வதற்காகவே வந்திருந்த தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் மாலை இந்தப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். மொத்தத்தில் பெருவளப்பூர் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *