சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி இலவச கண் மருத்துவ முகாம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 21- சென்னை பெரியார் திடலில் அறிவாசன் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பெரியார் மணியம்மை மருத்துவமனையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் வெகு சிறப்பான வகையில் கண் பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் சென்னை எழும்பூர் அர சினர் கண் மருத்துவமனை யில் இருந்து மருத்துவர் சவுந்தர்யா, ஆப்தால் மாலஜி, டி.சிந்து மற்றும் Specs SAM.COM தனியார் கண் மருத்துவ அமைப்பின் மூலமாக ஆர்.சாமுவேல் மற்றும் சத்யப் பிரியா, சரவணன் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையிலிருந்து எம்.கருப்பையா, வி.கே.சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு வந் திருந்த அனைத்து மருத்துவப் பயனாளி களுக்கும் மருத்துவ ஆலோ சனைகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

இத்துடன் மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் தர்ஷினி ஆனந்த் செவி லியர்கள் சி.சந்தியா, சி.ஆக்னஸ், உமா லூசி, நற்சோனை மற்றும ஜி.தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் அனைத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்வில் மொத்தம் 63 மருத்துவப் பயனாளர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுச் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *