சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 27-ஆவது பட்டமளிப்பு விழா! 1,500 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.21 மேற்கு தாம்பரம் சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில்
27-ஆவது பட்டமளிப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் 1,451 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் சிறி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 27-ஆவது பட்ட மளிப்பு விழா சிறீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில்  19.9.2026 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசிய தாவது: உதவி என கேட்டால் உடனடியாகச் செய்து கொடுப் பவர் லியோமுத்து. இன்று  மாணவர்கள் ஏஅய் தொழில்நுட்பத்துடன் பல்வேறு பொறியியல் படிப்புகளை புகுத்தி நன்கு கல்வி கற்க வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்களை கொண்டுவர முதலமைச்சர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நன்கு கற்ற கல்வி குடும்ப சூழல்களுக்காக மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சி பாரம்பரியத்தையும் மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் பெற்றோரிடம் அன்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில் 1,451 பட்ட தாரிகள் பட்டம் பெற்றனர். 1,249 இளநிலைப் பட்டதாரிகளும் 202 முதுநிலைப் பட்டதாரிகளும் அடங்குவர். மேலும் 35 மாண வர்கள் அண்ணா பல்கலைக் கழக தரவரிசை பெற்றனர்.

நிகழ்ச்சியில் சாய்பிரகாஷ் லியோ முத்து பேசும்போது, சாய்ராம் கல்வி நிறுவனங்களின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்வி சமூகப் பொறுப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றில் நிறுவனம் மேற்கொண்டுவரும் நட வடிக்கைகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜா, தகவல் தொடர்பு முதன்மை செயல் அதிகாரி நரேஷ்ராஜ், மாணவர் விவகாரத் துறை டீன் ராஜேந்திர பிரசாத், அறங்காவலர் சதீஷ், வணிக மேலாண்மை கல்லூரி இயக்குநர் மாறன் மற்றும் பேராசிரியர்கள் உள்பட ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *