விஜய் சேதுபதியின் அரசியல் தாக்கு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.14- நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கருந்து சமூக வலைதளங்களில் பேசி பொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்திற்காக முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தையும் நேரில் சென்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

நடிகர் அஜித்தையும் முதலமைச்சர் விஜய்யையும் ஒரே இடத்தில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ததுடன் அதன் புகைப்படங்களையும் காட்சிப் பதிவுகளையும் அதிகம் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் – 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டி யாளர்களுக்கு வீட்டிற்குள்ளேயே சட்டமன்றம் போன்ற போட்டியை நடத்தினர். நிர்வாக அணி, எதிரணி என இரண்டு அணிகளாகவும் அவர்கள் செயல்பட்டனர்.

அதற்காக, நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளரை நெறிப்படுத்த பேசிய போது, “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்… வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என்றார். மறைமுகமாக இப்பேச்சு முதலமைச்சர் விஜய்யைச் சாடுவதாக இருப்பதாக பலரும் விஜய் சேதுபதியின் பேச்சைப் பகிர்ந்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *