சென்னையில் எல்அய்சி பாலிசி முதிர்வுத் தொகை மோசடி! 17 ஆண்டுக்குப் பிறகு 2 பேர் கைது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.14- எல்அய்சி பாலிசி முதிர்வுத் தொகைக்கான ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 காசோலையை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு அண்ணா சாலையில் உள்ள எல்அய்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிய கண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், எல்அய்சி பாலிசிதாரரான விஜயகுமார் என்பவரின் பாலிசி முதிர்வு தொகையான ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500-க்கான காசோலை, அவரது சவுகார்பேட்டை முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், அந்தக் காசோலையை அடையாளம் தெரியாத நபர்கள் முறைகேடாகப் பெற்றதுடன், விஜயகுமார் பெயரில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து காசோலை தொகையை வங்கியில் இருந்து எடுத்து மோசடி செய்து விட்டனர்.

எனவே, அவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், மோசடிக்காரர்களை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், இவர்களை கண்டுபிடித்து கைது செய்ய காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த பிரதாப்பை (41) கடந்த 31ஆம் தேதி கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த சென்னை தரமணி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அர்ஜுனனை (வயது 50) நேற்று முன்தினம் (11.9.2026) கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *