தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு அக்டோபர் 31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய் வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப் படி அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசிய மில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள்.  நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள்.

அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண் டும் அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *