சென்னை, செப்.12 சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்துத் துன்புறுத்திய நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப் பதாவது:
“சந்தேகத்தின் பேரில் அழைத் துச் செல்லப் பட்டவர்களைப் பார்க்கச் சென்ற வள்ளி என்ற பெண்ணையும், அவரது மகன் திருமலையையும் காவல் துறையினர் தாக்கி லாக்கப்பில் அடைத்ததாகவும், இதைத் தட்டிக் கேட்ட வழக்குரைஞர் ஜெயந்தியை ஆண் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வை காட்சிப் பதிவு எடுத்த வள்ளியின் மகள் மீனாவையும் தாக்கிய கொடூரமும் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது.
பெரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. பெண்களைக் காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவதுதான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா?” என்று அவர் கடுமை யாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
