2026 செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளன்று, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், கடந்த நூற்றாண்டில் கேரளாவில் வைக்கம் வீதிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கான தடையை எதிர்த்து, அந்தத் தடையை உடைக்க 1924இல் பெரியார் நடத்திய வீரம் செறிந்த வைக்கம் போராட்டத்தை நினைவு கூரும் விதமாக வைக்கம் வீதிகளில் ஊர்வலமாக நடந்து சென்று வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் ஒன்று கூடி, தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வைக்கம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.கே.பினுமோன் (காங்கிரஸ்) அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்.
பேரமைப்பின் பொதுச்செயலாளர் கு.தனசேகர், தலைவர் சி.சேதுபதி, செயல் தலைவர் ஆர்.செந் தாமரைக் கண்ணன், துணைத் தலைவர் அன்பரசு முன்னெடுப்பில், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறைகளில் செயல்படும் இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
