பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி உயிழந்தோர் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவர்களது குடும்பத்தினருக்கும், தமக்குரியவற்றை இழந்து வாழ்வா தாரத்தை முற்றிலும் இழந்து தத்தளிக்கின்ற மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில அரசு நேபாளத்தில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு வருவதற்கு ஆவன செய்யவும் வேண்டுகோள் விடுத்தார்.
