சிந்து முதல் கீழடி வரை: திராவிட நாகரிகத் தொடர்பை உரைக்கும் உறை கிணறு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கட்டுரை, ஞாயிறு மலர்

கீழடி 2014ஆம் ஆண்டு அகழாய் வுகள் தொடங்கிய காலம் தொட்டே ஆங்காங்கே உறை கிணறுகள் அதிகம் தென்பட்டுக்கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் தென் மத்தியப் பகுதிகளாக மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உறை கிணறுகளை இன்றும் காணலாம் இந்த உறை கிணறுகளின் வரலாறு மிகவும் நீண்ட நொடியது.

கீழடி நாகரிகத்திற்கு முன்பே தமிழர்கள் தண்ணீர் தேவைக்கு கிணறுகளைத் தோண்டி மண் சரியாமல் இருக்க உறைகளை காப்பரண்களாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர்.

அண்மையில் பாகிஸ்தானுக்குச் சென்ற ஈழத்தமிழர் ஒருவர் தன்னுடைய பயணம் தொடர்பான யு டுயூப் சேனலில் பாகிஸ்தானின் முல்டான் பகுதிக்குச் சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தார். அப்போது அங்கு கிணறுவெட்டும் பணி நடந்துகொண்டு இருந்தது. பெரிய பெரிய மண் வளயங்களை கிணறு தோண்டத்தோண்ட ஒன்றுக்கு மேல் ஒன்று வைத்துக்கொண்டே செல்வார்கள். தண்ணீர் வரும் வரை ஆழமாக வெட்டுவார்கள். உறையைப் போட்டுக்கொண்டே செல்வார்கள். தண்ணீர் வந்த பிறகு உறை போடுவதை நிறுத்துவார்கள்.

போர் போடும் நவீன வசதிகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் உறை கிணறுகள் வெட்டுவது முற்றிலும் நின்றுவிட்டது. கீழடி முதல்கட்ட அகழாய்வில் தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக உறைகிணறுகள் கண்டறியப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

உறை கிணறுகள் சுகாதாரமான நீரை ஆதாரமாக கொண்டது, மழை நீர் சேகரிக்கப்பிற்கும் காரணியாக இருந்தது.

உறை கிணறுகள் பறவை மற்றும் விலங்குகள் உள்ளே விழுந்துவிடாமல் இருக்கவும் இலை தழை தூசுகள் விழுந்துவிடாமல் இருக்கவும் மேலே பெரிய மூடி போன்றவைகள் வைப்பார்கள்.

மதுரை புதூரில் உள்ள எங்கள் வீட்டில் இருந்த உறை கிணற்றில் தென்னந்தட்டிகளைக் கொண்டு மூடிவிடுவோம், தண்ணீர் தேவைப்படும் போது தட்டியை அகற்றிவிட்டு தண்ணீர் இறைத்து பின்னர் மூடி விடுவோம்,  இன்று கட்டடங்களுக்கு மேலே இருக்கும் நெகிழி நீர்த்தொட்டிகள் போன்றே உறைகிணறுகள் மண்ணுக்குள் இருக்கும்.

சுகாதாரமான குடிநீருக்கான 2,500 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணறுகளை அமைத்தார்கள்  இதே உறை கிணறுகள் இன்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் பார்க்கமுடிகிறது.

இந்திய தீபகற்பம் சிந்து முதல் கீழடிவரை திராவிட நாகரிகம் பரவி இருந்ததர்கு இதுவும் ஒரு உயிரோட்டமுள்ள சிறந்த சான்று ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *