பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை த.வெ.க.-வுக்கு எதிராக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாமக்கல், செப். 10–– கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப் படும் என்று உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமை யாகத் தள்ளுபடி செய்யப்படும்; பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” எனத் தவெக வாக்குறுதி அளித்திருந்தது.  ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாகக் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.

தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தவெக அரசு கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி தவெக-வை தோற்கடிக்கத் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *