தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் முதல் பொதுக் கூட்டம் : தமிழர் தலைவர் பங்கேற்பு (பாபநாசம், 9.9.2026)

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முறையே முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1000, ஆறுதல் பரிசு ரூ.500 வழங்கி, பொன்னாடை அணிவித்து மாணவர்களையும், பெற்றோரையும் ஊக்கப்படுத்தினார். முதல் பரிசு : மா.தேன்மொழி – பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம். இரண்டாம் பரிசு : லூ.ம.பாஸ்டினா மிருணாளினி – பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பாபாநாசம். மூன்றாம் பரிசு : ம.காவியா – அரசினர் கலைக்கல்லூரி, குடந்தை, ம.காவியா (9.9.2026 அன்று பெரியார் மணியம்மையார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) நடத்திய, தந்தை பெரியார் 148 ஆம் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). ஆறுதல் பரிசு : மு.பஷிமா – மேல்நிலைப் பள்ளி, ராஜகிரி. உடன்: ஜெயகுமார், துரைராசு, நிம்மதி, மோகன். (பாபநாசம், 9.9.2026)

திராவிடர் கழகம்

பாபநாசம் ஒன்றியத்தில் இருக்கும் 80 வயதுக்கும் மேற்பட்ட பெரியார் பெருந்தொண்டர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, அவர்களின் தொண்டுக்குச் சிறப்பு செய்தார். வே.துரைசாமி (வயது 89) – கபிஸ்தலம், சு.கணேசன் (வயது 90) – பாபநாசம், கு.ப.செயராமன் (வயது 89) – பாபநாசம், மணியன் (வயது 85) – நாணல்காடு, கலியபெருமாள் (வயது 84) – நாணல்காடு, அ.அழகுவேல் (வயது 80) – அய்யம்பேட்டை, முத்துமீனாள் (வயது 70) – ராஜகிரி, பொறியாளர் நடராசன். (பாபநாசம், 9.9.2026)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில்
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (பாபநாசம் – 9.9.2026)

அசோதை – இரா. அரங்கராசன் இல்ல அறிமுக விழா – கழகக் கொள்கை விளக்க இல்லமாக அமைந்துள்ளதை தமிழர் தலைவர் திறந்து வைத்தார் (வசிஷ்டபுரம், 9.9.2026)

திராவிடர் கழகம்

* நினைவில் வாழும் க.லெட்சுமணன் இராமாயி அம்மாள் ஆகியோரின் மகள், மருமகன் அசோதை – இரா. அரங்கராசன் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: பா.வாலண்டினா – பாண்டியன், இங்கர்சால் – ஆனந்தி, ரஷ்யா – தனராசு, விக்டோரியா, எலிசபெத், இரா.ஜெயராமன், இரா.தர்மராஜன்.
* மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில் குத்து விளக்கை அணைத்து மின் விளக்கை ஒளிரச் செய்தார் மருத்துவர் கு. குணகோமதி.
* கடவுள் மறுப்பு கல்வெட்டு, தந்தை பெரியார் நூலகம் ஆகியவற்றை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். உடன்: புலவர் வை. நாத்திகநம்பி, தங்க. சிவமூர்த்தி.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

* இல்ல வளாகத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் திராவிடர் கழக எழுச்சி கொடியினை தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார்.
* சுவரின் அனைத்துப் பகுதியிலும் தந்தை பெரியார் கொள்கை வாசகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பார்க்கும் வண்ணம் வாயில் அருகே தந்தை பெரியார் முழு உருவப்படம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பெரியார் பேசுகிறார் செய்திப் பலகையை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு
இரா. குணசேகரன் திறந்து வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *