வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சென்னை குடிநீர் ஏரிகள்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.7- சென்னையின் முக்கிய குடிநீா் ஏரிகளில் வெறும் 43 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

இந்தச் சூழலில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால், ஏரிகளில் நீா் இருப்பு தொடா்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

ஏரிகள் நிலவரம்

பூண்டி ஏரியின் முழுக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. நேற்றைய (6.9.2026) காலை நிலவரப்படி 1,344 மில்லியன் (41.60 %) கன அடி நீா் உள்ளது. ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் கண்டலேறு-பூண்டி கால்வாய் நுழைவுப் பகுதிக்கு விநாடிக்கு 370 கன அடி தண்ணீா் வருகிறது.

அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,660 மில்லியன் கன அடியும் (45.55 %), 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,748 மில்லியன் கன அடியும் (52.97 %) நீா் இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடியும் (11.93%), கண்ணன்கோட்டை ஏரியில் 281 மில்லியன் கன அடியும் (56.20%) நீா் இருப்பு உள்ளது. மொத்தம் 5 ஏரிகளில் 5,162 மில்லியன் கன அடி அதாவது 43.91 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2,182 மில்லியன் கன அடி குறைவாகும்.

இந்தச் சூழலில், சென்னை மாநகருக்கு மாதம்தோறும் ஒரு டிஎம்சி குடிநீா் தேவைப்படுகிறது. தற்போது ஏரிகளில் சுமார் 5 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில், அக்டோபா் மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.

இது, தமிழ்நாட்டிற்கு பிரதான நீா் ஆதரவும் வழங்கும் காலமாகும். ஆகையால், வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏரிகள் மீண்டும் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *