இராமேசுவரம், செப். 7- 5.9.2026 அன்று இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் இராமேசுவரம் உதயா தங்கும் விடுதியில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிறப்பாக நடைபெற்றது.
தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா – பட ஊர்வலம்! பெரியார்கேட்கும் கேள்விகள் – 148 ஆயிரம் புத்தகங்கள் வாங்கி பரப்ப முடிவு, பேய்கரும்பில் மாணவர்களுக்கு பரிசளித்தல் நூல்வெளியீடு! தமிழர்தலைவரின் அன்புக் கட்டளைப்படி அடையாறு ஆனந்தபவனில் 100 இனிப்பு பெட்டிகள் வாங்கி பிறந்த நாள் பரிசளிக்க முடிவு! மக்கள்தொகைகணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிடும் சூழ்ச்சியைக் கண்டித்து 9.9.2026இல் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்! – போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று, அறிவுலகப் பேரா சான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழாவினை நன்றித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்திடவேண்டிய சிறப்பினையும், தமிழர்தலைவர் அவர்களின் மகத்தான பேருழைப்பையும் விளக்கி செயலாக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் மு.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முத்துராமன், நகர தலைவர் எம்.எட்வர்டு, நகர செயலாளர் சி.அறிவுச்செல்வன், தங்கச்சிமடம் ஒன்றியதலைவர் குழந்தைராயர் தஞ்சைதெற்கு ஒன்றியச்செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், கபிலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
