தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்க அழைப்பு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

சென்னை, செப்.6 நேற்று (5.9.2026)  சென்னை – பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., மாநில இயக்கச் சீரமைப்புத் திட்டக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் – இவர்களுடன் அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர், அகில இந்திய காங்கிரஸ் கட்சிச் செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் சந்தித்துப் பேசினர். காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலம் முழுவதும் நடத்திடவுள்ள ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் கட்டாயம் குறித்த பரப்புரைக் கூட்டம் பற்றிக் கூறியதுடன், சென்னையில் நடத்திடவுள்ள கூட்டத்தில் பங்கேற்றிடத் தமிழர் தலைவரை வேண்டி அழைத்தனர்.

வருகை தந்த தலைவர்களிடம், தற்போது நடைபெற்றுவரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஜாதி வாரிக் கணக்கெடுப்பிற்கு ஏதுவாக ஜாதிப்பட்டியலைக் கணக்கெடுப்பாளரிடமோ அல்லது கணக்கெடுப்புப் படிவத்திலோ உரிய வகையில் தராமல் குழப்பத்தை ஏற்படுத்திடும் நிலைதான் நீடிக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பற்றிய கணக்கெடுப்பில் – அவர்களை ஜாதிவாரியாக கணக்கெடுப்பதைத் தவிர்க்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes) என்ற அளவில் மட்டும் குறிப்பிடுவது ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் நோக்கத் தினைச் சிதைப்பதாக உள்ளது.

மேலும் நாட்டிலுள்ள பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதால் நிறுவன உரிமை தனியாருக்குச் செல்வது மட்டுமில்லாமல், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாளர் சேர்ப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடுமுறை முற்றி லும் தவிர்க்கப்படும் நிலை உரு வாகி வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைகள் ஊக்குவிக்கின்றன. இந்த நிலை மைகளை நடத்தப்படவுள்ள கூட் டங்களில் மக்களுக்கு எடுத்துச் சொல் லப்பட வேண்டும் என்று வருகை தந்த தலைவர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் விளக்கிக் கூறினார்.

காங்கிரசுக் கட்சித் தலைவர் களுடன் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஒ.பி.சி. பிரிவின் மாநிலத் தலைவர் டி.ஏ. நவீன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்எம்டிஏ கோபி மற்றும் பொறுப்பாளர் பலரும், தோழர்களும் வந்திருந்தனர்.

வடநாட்டிலிருந்து வந்திருந்த தலைவர்களுக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்  பெரியார் அருங்காட்சியகத்தைக் காட்டி விளக்கினார். பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் தோழர்கள் உடன்  இருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *