டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.6 டில்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரேகா குப்தா (பெண்) உள்ளார். இந்நிலையில்,  ‘4 பிஎம் நியூஸ் நெட்வொர்க்’ (4 pm News Network) என்ற யூடியூப் சேனலின் சார்பில் ஷாஹீன்கான், நபிசா கான் என்ற இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் டில்லி பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றனர். தொடர்ந்து இருவரும் ரேகா குப்தா, அமித் ஷாவை நோக்கி சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறையினரால் இரண்டு பெண் பத்திரிகையாளர்களும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் என்பதால் இரண்டு மடங்கு தாக்குதல்

3.9.2026 அன்று சாகேத் காவல்நிலை யத்தில் வைத்து தாங்கள் தாக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஷாஹீன் கான் காணொலி மூலம் இதனை அம்பலப்படுத்தி யுள்ளார். அதன்பின்னரே இந்த விஷயம் வெளியில் செய்தியாக தற்போது வந்துள்ளது. இதுதொடர்பாக ஷாஹீன் கான் வெளியிட்டுள்ள காணொ லியில், “அமித் ஷா மற்றும் ரேகா குப்தா விடம் கேள்வி எழுப்பியதற்காகவே நாங்கள் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளானோம். எங்களது பெயரைக் கூறியபோது, அதனை எங்களின் மதம் சார்ந்த (இருவரும் முஸ்லிம்கள்) அடையாளமாகப் புரிந்து கொண்டு காவல்துறை அதிகாரிகள் தங்களை மேலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்” என அவர் குற்றம்சாட்டினார். மேலும் மற்றொரு பெண் பத்திரிகையாளரான நபிசா கான் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் படுகாயமடைந்து, மயக்க நிலையில் நாற்காலி யில் அமர வைக்கப்பட்டுள்ள காட்சிகளும், காயங்களின் அடையாளங்களும் ஷாஹீன் கானின் காணொலியில் பதிவாகியுள்ளன.

பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்

நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா (PCI), இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் சங்கம் (IWPC), டில்லி பத்திரிகையாளர் சங்கம் (DUJ), பிரஸ் அசோசியேஷன் மற்றும் கேரள ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (KWJU) உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

டில்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் இந்தச்சம்பவம் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உடனே நடத்த வேண்டும் என்றும், ஊடகச் சுதந்திரத்தை வன்முறை மூலம் ஒடுக்க முயன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. அதே போல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களும் காவல்துறையின் இந்த வன்முறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *