சிம்பன்சிகளுக்கும் உண்டு ‘வட்டார வழக்கு’ புதிய ஆய்வில் ஈர்க்கும் தகவல்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.6- மனிதர்களைப் போலவே சிம்பன்சி குரங்குகளும் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு ஏற்பத் தனித்துவமான ‘வட்டார வழக்குகளைக்’  கொண்டுள்ளன என்பது புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஜாம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலுள்ள சிம்பன்சி குட்டிகளின் குரல் ஒலிகளை விரிவாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் முடிவில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன:

சிம்பன்சிகளின் குரல் ஒலியும், அவை தொடர்பு கொள்ளும் முறையும் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.

அவை வளரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்பவே அவற்றின் குரல் உச்சரிப்புகள் மற்றும் தொடர்பு முறைகள் மாறுகின்றன.

வளர வளர மாற்றம்: மனிதர்கள் தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு வட்டார வழக்குகளைப் பேசுவது போல, சிம்பன்சி குட்டிகளும் வளர வளர அவற்றின் குரல் ஒலிகளில் உள்ள வட்டார வழக்கு வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கின்றன. இயற்கையாகவே பிறப்பில் அமையும் குரலைத் தாண்டி, சிம்பன்சிகள் தங்கள் சமூகச் சூழலிடமிருந்து கற்றுக் கொண்டு பேசுவதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *