விவசாய நில வகை மாற்ற மசோதாவை திரும்பப் பெற வேண்டும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 03- “விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண் டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு விவசாய நிலங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கிறது. இதனால் விவசாய நிலங்களின் பரப்பளவும், உணவுப் பொருட்களின் உற்பத்தியும் குறைவதோடு, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விவசாயிகளின் நலன்களும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

இந்த நிலையில் விவசாய நிலங்களை மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்துவ தற்காக, நில வகை மாற்றம் செய் வதற்கு இருந்து வந்த தடைகளை நீக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது.

இது சரியல்ல. விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்றுவதற்கு 2017-ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றை தளர்வு செய்ய தற்பொழுது முயற்சிகள் நடை பெறுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தற்பொழுது நகர், ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொள்ள சட்டத்திருத்த மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதில் நில மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் போது நன்செய் வகைப்பாட்டு நிலங்களை பயன்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. இதற்கு உள்ளாட்சி அமைப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது.

அதேபோல் உள்ளாட்சிகளிடம் உள்ள அனுமதி வழங்கும் அதிகாரத்தை நகர் மற்றும் ஊரக அமைப்பு இயக்குநருக்கு மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது. இது உள்ளாட்சி களின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, இம் மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *