“தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது அரசுக்கு ஓர் எச்சரிக்கை” மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 03- “தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளி விவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 – ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு. ஆனால் இதே காலகட்டத்தில், இந்தியா +9%, கருநாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரப் பிரதேசம் +19%, மகாராஷ் டிரா +8%, தமிழகம் மட்டும் -1%.

சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு. ‘ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு ஆண்டுக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது’ என்று சிலர் சொல்லலாம்.

உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை. இந்த நிலை தொடர்ந் தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?

அல்லது சாலைகள், உள்கட்ட மைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்.

இந்த -1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறு வதை தமிழ்நாடு தாங்க முடியாது. இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்ல வேண்டும்” என்று அவர் தெரி வித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *