சென்னை, செப். 02- ‘‘கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்’’ என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 110ஆவது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று பேசியதாவது: தவெக அரசு பொறுப் பேற்ற மே 10-ஆம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக் களுக்கும் ஜனநாயக நெறி முறைகளின் அடிப் படையில், வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசாக சேவையாற்றி வருகிறது. மக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கான சூழலை இந்த அரசு உறுதிப்படுத்தி வருகிறது.
ஆனால், கடந்த திமுக ஆட்சி காலங்களில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்து போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
அவ்வாறான விவ சாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியு றுத்தி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடு பட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனிதநேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், கல்வியின் ஒளியை ஏற்றி சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் நாட்டு வளர்ச்சியின் அடித்தளமாக உள்ளனர்.
எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக் கும் இந்த அரசு, விவ சாயிகள் மற்றும் ஆசிரி யர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளை யும் மனிதநேய அடிப் படையிலும், ஜனநாயக கொள்கைகளின் அடிப் படையிலும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது என்பதை இந்த பேர வைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த அரசு உறுதுணையாக நிற்கும். இந்த நடவ டிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத் தும். இவ்வாறு முதல மைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
