டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய அரசின் ஜி.டி.பி.7.8% குறித்து கேள்வி: மேனாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், மோடி அரசின் 7.8% GDP வளர்ச்சி கணக்கை கேள்விக்குட்படுத்தி, உண்மையான பொருளாதார வளர்ச்சி 2.6% மட்டுமே என்றும், புள்ளிவிவரங்களில் “முறைகேடு/கணக்குச் சாகசம்” செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
* உயர்ஜாதியினர் நலன் பாதுகாக்க ஆணையமா? உயர்ஜாதியினரின் ஆதரவு குறையும் அச்சத்தில் சவர்ணா/உயர்ஜாதியினரின் குறைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆலோசித்து வருவதாகவும், யு.ஜி.சி. விதிகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக “ராஷ்ட்ரீய சவர்ணா ஆயோக்” என்ற தேசிய ஆணையத்தை அமைக்க சில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் மனு அளித்துள்ளதாகவும் தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு காலதாமதமானது என விவசாயிகள் குற்றச்சாட்டு: மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் நாகப்பட்டினம் போன்ற கடைமடை மாவட்டங்களைச் சென்றடைய 7 முதல் 10 நாட்கள் ஆகும் என்பதால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தி இந்து:
* ஓபிசி தலைமைத்துவத்தை வளர்க்கும் முயற்சிக்கு கருநாடகா மேனாள் முதலமைச்சர் சித்தராமையா ஆதரவு: கருநாடகா முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சூத்திர சேவா சங்கங்கள் அமைத்து, ஓபிசி இளைஞர்களை பொது வாழ்வில் ஈடுபடுத்தி புதிய தலைமுறை அரசியல் தலைவர்களை உருவாக்கும் முயற்சிக்கு சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் நடைமுறை தொடர்வதாக சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பு (SKA) குற்றச்சாட்டு: நாடு முழுவதும் 2024–2025 ஆய்வில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்ற ஒன்றிய அரசின் கூற்றை மறுத்து, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது 46 மாவட்டங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா
