குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்த நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செயலுக்கு உறுதுணையாக இருந்த நகராட்சி மன்றத் தலைவர் திரு எஸ்.சவுந்தரராஜன் அவர்களை சந்தித்து கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவகுமார், மாவட்ட செயலாளர் இ.தமிழ் தரணி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்டக் காப்பாளர் வி.சடகோபன், குடியேற்றம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட ப.க.அமைப்பாளர் மா.அழகிரிதாசன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா நகர ப.க.தலைவர் பா.ஜீவானந்தம், நகர ப.க.செயலாளர் பிரகாசம், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் நகர மன்றத் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். குடியேற்றம் நகர மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் நகர திமுக துணைச் செயலாளர் ஜம்புலிங்கம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. (குடியேற்றம், 1.9.2026)
