சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்: மாநகராட்சி புதிய ஒப்பந்தம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை செப் 3- சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் முதல்கட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப் பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக காத்திருக்க குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மின்விளக்குகள், வெயில் தாங்கும் கூரை, பாதுகாப்பான கண்ணாடி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.மேலும், பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல்கள், வைஃபை வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளப் பாதையும் அமைக்கப்படும். மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதியும் இந்த பேருந்து நிறுத்தங்களில் இடம்பெற உள்ளது.
இந்த திட்டம், தேவையுள்ள இடங்களில் மேலும் பல பகுதிகளுக்கும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *