விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரி ககாரின் (Yuri Gagarin) அன்றைய ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் குளூஷினோ (Klushino) இவர்களது பெற்றோர் அலெக்சி இவனோவிச் ககாரின், அன்னா திமோபயேவ்னா ககாரினா. கால்நடைப் பண்ணை ஒன்றை நிர்வாகித்து வந்தவர்கள்.
முதலில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்து பின்னர் சோவியத் விமானப்படையில் சேர்ந்தார். அதன் பிறகு விண்வெளி தொடர்பான ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்தில் இணைத்து பணியாற்றினார். விண்வெளிக்குச்செல்ல தேர்வான 480 பேர்களில் (இதில் வேற்று நாட்டவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) பலமுனைப் போட்டிக்குப் பிறகு குலுக்கல் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்
விண்வெளி அறிவியலில் ‘முதல்’ மைல்கல்
1961 ஏப்ரல் 12 அன்று, யுரி ககாரின் வொஸ்டாக் 1 (Vostok 1) விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். இது வெறும் பயணம் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றில் ஒரு மாபெரும் அறிவியல் புரட்சி ஆகும் அவர் பூமியை ஒருமுறை முழுமையாகச் சுற்றி வர 108 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். அந்த விண்கலம் மணிக்கு சுமார் 27,400 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.
ககாரினின் பயணம் பல இயற்பியல் விதிகளுக்கு சவாலாக அமைந்தது: விண்கலம் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும்போதும், மீண்டும் உள்ளே நுழையும்போதும் ககாரின் உடல் எடையைப் போல 8 முதல் 10 மடங்கு (8-10G) அழுத்தத்தை எதிர்கொண்டார். விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில் மனித உடல் எப்படிச் செயல்படும் என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் இவரே. அங்கு அவர் திரவங்களை அருந்தவும், உணவு உட்கொள்ளவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.
அந்தக் காலத்தில் கணினிகள் இன்று இருப்பதை விட மிகவும் எளிமையானவை. ககாரின் சென்ற விண்கலம் தானியங்கி முறையில் இயங்கியது.
விண்கலத்தின் கட்டுப்பாடுகள் பூட்டப்பட்டிருந்தன. ஏனெனில், விண்வெளியில் எடையற்ற நிலையில் மனித மூளை எப்படிச் செயல்படும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்த ‘ரகசிய குறியீடு’ (Code: 125) அவரிடம் வழங்கப்பட்டிருந்தது.
யூரி ககாரினின் பயணம் மருத்துவ அறிவியலுக்குப் புதிய கதவுகளைத் திறந்தது. விண்வெளியில் மனிதனின் இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் பார்வைத் திறன் மாறாமல் சீராக இருப்பதை இவரது பயணம் உலகிற்கு உணர்த்தியது.
இதுவே பிற்காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் ‘அப்பல்லோ’ திட்டங்களுக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்தது.
