டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயர் மம்தானி எதிர்ப்பு!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ராலியில் உள்ள சுகாதார மய்யத்தில் நோயாளிகளுக்கு துப்புரவுப் பணியாளர் ஊசி செலுத்தியது கேமராவில் பதிவானது. விளக்கம் கேட்டு அறிவிக்கை.
தி ஹிந்து:
* ‘குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வி பட்டியலை ரத்து செய்க’: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கார்கே, ராகுல் காந்தி கடிதம்.
தி டெலிகிராப்:
* ‘மக்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைப்பது, சமூகத்தைப் பின்தங்க செய்வதாகும்’: அய்சா (AISA) தலைவர் நேஹா போரா பேட்டி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான ‘கிரீமிலேயர்’ அளவுகோல்களை வகுக்க 2 ஆண்டுகள் அவகாசம் கோரும் அரசு. அதை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி,‘‘வழக்கை வரும் ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1ஆம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்தார்.
– குடந்தை கருணா
