டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி தடையை நீடித்து உத்தரவு
* ‘நீட்’ போராட்டத்தின் போது நடந்த பாலியல் வன்கொடுமை புகார்களுக்கு முன்னுரிமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
* மீண்டும் போராட்டமா? செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று, நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டில்லியில் மாணவர்கள் பங்கேற்கும் பேரணியை நடத்த கரப்பான் பூச்சி ஜனாத கட்சி அறிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு, ஒரே தேர்தல், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கும் தவறான முன்மொழிவு என ப.சிதம்பரம் கண்டனம். இது தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
தி இந்து:
* இட ஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு முயற்சி: ஒன்றிய அரசின் சிவில் துறை சார்ந்த நிறுவனங்களில் 8.2 லட்சத்திற்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, நரேந்திர மோடி அரசு “பின்வாசல்” வழியாக இடஒதுக்கீட்டை சிதைக்க முயல்வதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* இட ஒதுக்கீடுத் துரோகிகள்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டக்காரர்களை ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே “இடஒதுக்கீடுத் துரோகிகள்” எனக் கண்டித்து, இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விமர்சனம். ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அமைச்சர் சிராஜ் பஸ்வான் ஆதரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘நீதித்துறையின் தோல்வி’: 45 ஆண்டுகள் பழமையான வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து: 1981 இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை 22 ஆண்டுகளும், மேல்முறையீடு 22 ஆண்டுகளும் தாமதமானதை உச்சநீதிமன்றம் நீதித்துறையின் தோல்வி எனக் கூறி, 70 வயதைக் கடந்த உடல்நலக்குறைவான உயிருடன் உள்ள ஒரே குற்றவாளிக்கு பிணை வழங்கியது.
– குடந்தை கருணா
