ராஞ்சி, ஆக.24 ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 900க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று (23.8.2026) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள் ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல மைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி – சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாண வர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். பாதிக்கப்பட்ட அரசுப் பணியா ளர்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன் றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிபதி தீபக் ரோஷன், அரசுத் தேர்வுகளை ரத்து செய்யும் ஜார்க்கண்ட் அரசின் அறிவிப்பை நிறுத்திவைப்பதாக ஆக. 20 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள் மீண்டும் கடந்த 26.8.2026 அன்று போராடினர். போராட்டக்களத்தில் கூடிய மாணவர்கள், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றனர்.
இதைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் மாணவர் அமைப்பு களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் பெயர் குறிப்பிட்ட 28 நபர்கள் மீதும், பெயர் குறிப்பிடப்படாத 900 நபர்கள் மீதும் மற்றும் தனித்தனியாக மூன்று முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் மாணவர் சங்கத் தலை வர்கள் குணால் பிரதாப் சிங், பியூஷ் குமார் உள்ளிட்ட பெயர் குறிப்பிடப்பட்ட 28 நபர்கள் மீதும், அடையாளம் தெரியாத சுமார் 900 பேர் மீதும் அரசுப் பணியைத் தடுத்தல் மற்றும் வன்முறைப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

