‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (இராஜபாளையம், 20.8.2026)

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

* சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். * இராஜபாளையத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறுவர்கள் நூலகத்திற்கு இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் நூலகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

திராவிடர் கழகம்

இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி , விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, இராஜபாளையம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

* இராஜபாளையத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறார் நூலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். நூலகம் மற்றும் கூட்ட அரங்கத்தை பார்வையிட்ட தமிழர் தலைவர் பாராட்டினார்.

திராவிடர் கழகம்

* விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெத்தையா – ராஜேஸ்வரி ஆகியோர்களின் பிள்ளைகள் உதித்த பாரதி, இலக்கியா பாரதி ஆகியோர் உண்டியலில் சேமித்த தொகையை பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர். * இராஜபாளையம் நந்தா தங்கும் விடுதியில் உரிமையாளர் நந்தா ராஜா அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். * சிவகாசி சென்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் திமுக, திராவிடர் கழகத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *