திருச்சி, ஆக.21- 9ஆம் வகுப்பு மாணவி கே. முத்தரந்தனா மற்றும் 6ஆம் வகுப்பு எஸ். லிதுஷா ஆகிய இருவரும் ஒரு மணிநேரம், ஒரு நிமிடம், ஒரு நொடிக்கான சிலம்பம் போட்டியில் உலக சாதனைக்காக பங்கேற்று சான்றிதழ் வென்றார்.
8ஆம் வகுப்பு மாணவி பி.எம். சாத்விகா, மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் பங்கேற்று கோப்பையை யும் சான்றிதழையும் வென்றார். 9ஆம் வகுப்பு மாணவி வி.சஹானா மாநில அளவிலான சது ரங்கப்போட்டியில் கலந்து கொண்டு 8ஆம் இடம் பெற்று சான்றிதழும் பரிசும் வென்றார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமை யாசிரியை மற்றும் ஆசிரி யர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
