நீட் தேர்வை முழுமையாக நீக்கவும் உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை நீக்கவும் இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பாக இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது.
நாள்: 24.08.2026 திங்கள் பிற்பகல் 3.00மணி அளவில் பேருந்து நிலையம் அருகில், கந்தர்வக்கோட்டை
மாலை 4.00 மணி அளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில்.
மாலை 5.00 மணி அளவில் பேருந்து நிலையம் அருகில் திருமயம்.
தலைமை: அ.ஜெ.உமாநாத் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் – முன்னிலை: இரா.வெற்றிக் குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் – ஒருங்கிணைப்பாளர்: நாத்திக பொன்முடி மாநில இளைஞரணிச் செயலாளர். – பரப்புரைச் சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் இந்நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தோழர்களும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி உள்ளிட்ட தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இவண்: புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம்.

