மோடிக்கு எதிராகப் பேசினால் உங்கள் எதிர்காலம் நாசமாகும் சுதந்திர நாள் உரையில் மறைமுகமாக மாணவர்களை மிரட்டிய அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

அலகாபாத் ஆக 18 ஒன்றியத்தில் மோடி அரசு வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமானவர்களை அனைத்து துறைகளிலும் நுழையவிட்ட பிறகு சுதந்திர நாள் கொண்டாட்டம் என்பது அரசியல் பேசும் மேடையாக மாறிவிட்டது

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் தன் வசப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.

அலகாபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகஸ்ட்  15 ஆம் தேதி அன்று மூவர்ணக்கொடியை ஏற்றிய அவர் பேசும் போது ‘‘நாட்டில் உயர் பதவியில் உள்ளவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் இளைஞர்கள் நடத்தியப் போராட்டத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது, மாணவர்கள் பிரதமர் குறித்துப் பேசும் போது மரியாதையாகப் பேசவேண்டும், இல்லை என்றால் அவர்களின் எதிர் காலம் குறித்து அவர்களின் பெற்றோர் கவலைப்படவேண்டி இருக்கும்’’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும் போது அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தரின் சுதந்திர நாள் உரை. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கொடுமைகளை அவரால் எண்ணி பார்க்க முடிய வில்லை. நாட்டின் பிரதமருக்கு எதிராக மாணவர்கள் பேசத் துணிவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். மாணவர்களை மிரட்டியுள்ளார்

கல்வி முறை முழுமையாக இந்த ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளர்களின் கைகளில் வீழ்ந்துவிட்டது. இந்தியப் பல்கலைக்கழக வளாகங்கள் இந்த சங்கிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, நம் கல்வி முறையை ஒருபோதும் சீரமைக்க முடியாது.”

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *