புதுடில்லி, ஆக.18 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்குரை ஞர் விஜய் ஹன்சாரியா நியமிக் கப்பட்டார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
ரேவந்த் ரெட்டி
நாட்டில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 14 மாநிலங்களின் முதலமைச்சர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குற்றவியல் வழக்குகள்
மேற்கு வங்காள முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக் குகளும், கருநாடக முதலமைச் சர் டி.கே.சிவக்குமார் மீது 19 வழக் குகளும் நிலுவையில் உள்ளன.
முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 192 குற்றவியல் வழக்குகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களில், 251 பேர் குற்றவியல் வழக்குகளை சந்தித்து வருகின் றனர். அவற்றில் 170 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.
மொத்தம் உள்ள 233 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 பேர் (33 சதவீதம்) மீது குற்ற வியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கத்தக்கவை ஆகும்.
கேரளம், தமிழ்நாடு
மாநிலவாரியாக பார்த்தால், கேரளாத்தின் மொத்த எம்.பி.க்கள் 20 பேரில் 19 பேர் குற்ற வியல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர். அவர்களில் 11 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.
17 தெலங்கானா எம்.பி.க்களில் 14 பேர் மீதும், 21 ஒடிசா எம்.பி.க்களில் 16 பேர் மீதும், 14 ஜார் கண்ட் எம்.பி.க்களில் 10 பேர் மீதும், 39 தமிழ்நாடு எம்.பி.க்களில் 26 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.
உத்தரபிரதேசம், மகாராட் டிரா, மேற்கு வங்காளம், பீகார், கருநாடகா, ஆந்திரா ஆகிய பெரிய மாநிலங்களின் சுமார் 50 சதவீத எம்.பி.க்கள் குற்ற வியல் வழக்குகளை சந்தித்து வருகின் றனர்.
கடந்த ஆண்டு, 1.243 குற்றவியல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. அதே ஆண்டில் 1,050 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எம்.பி.. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அவற்றை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். அந்த வழக்குகளின் விசாரணையை முடித்த பிறகு தான் மற்ற வழக்குகளை தனி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் முடிந்த பிறகு தான் மற்ற வழக்குகளை தனி நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகள் ஒதுக்க வேண்டும். அந்த வழக்குகளின் முன்னேற்றத்தை உயர்நீதிமன்றங்கள் மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணை முடி வடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
