ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் ஜே.எஸ்.எஸ்.சி.–சி.ஜி.எல். தேர்வை ரத்து செய்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ராஞ்சி, ஆக.18- அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

நேற்று (17.8.2026) அம்மாநில அமைச்சரவை கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:

“தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசா ரணை மேற்கொள்ளப்படும். அது சிறியது, பெரியது என எதுவாக இருந்தாலும் விசாரணை நடை பெறும். இது 2014 முதல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பொருந்தும்.

டிடிபிஎல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வு களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது தேர்வு, அதன் முடிவுகள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்வது ஒன்று மட்டும்தான். அது தேர்வு சீர்திருத்தங்கள் சார்ந்து வெளிப்படைத்தன்மை உடன் அரசு செயல்படும் என்பதுதான்” என்றார்.

ஜே.எஸ்.எஸ்.சி. –– – சி.ஜி.எல். தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ள மாணவர்கள் அதை கொண் டாடினர். மேலும், தேர்வு முறைகேடு சார்ந்து சிபிஅய் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (ஜேஎஸ்எஸ்சி) மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மாணவர்கள் போராடி வருகின் றனர். அரசு தரப்பில் ஏற்கெனவே அய்ந்து முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

இதனால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிர மடைந்து வருகின்றன. மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஅய்டி அழைப்பாணை அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் பதவிவிலகல் கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *