‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் நிறுவனத் தலைவரும், சிறந்த பெரியாரிய அம்பேத்கரிய ஆற்றலாளரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் முனைவர்
திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இன்று (17.8.2026) 64ஆம் ஆண்டு பிறந்த நாள்.
மாணவப் பருவம் முதற் கொண்டேபெரியார் திடலுடன் இணைந்த – உருவான கொள்கை சீலர் அவர்.
கருத்தியல் தலைவர் மட்டுமல்ல; என்றும் ‘களப் போராளி’ என்று தம்மை ஆக்கிக் கொள்ளும் ஒரு லட்சியப் போர் வீரர்.
அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழவும், சிறந்த தொண்டறச் செம்மலாக மேலும் மேலும் லட்சியப் பாதையில் தெளிவுடனும், துணிவுடனும் தொடர வேண்டும் என்றும் நெஞ்சார வாழ்த்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.8.2026
