அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த மருத்துவர்கள் கோரிக்கை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 17– அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தும் அறிவிப்பை  சட்டப் பேரவையில்   சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் வெளி யிட அரசு மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு. தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதம் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. உயிர்காக்கும் துறையான சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் அதிக முக் கியத்துவம் தருவார் என எதிர் பார்க்கிறோம்.

37 அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அனைத்து சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவத் துறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை முனைப் புடன் செய்தால் தமிழ்நாட்டில் நிச்சயம் மிகப்பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்து வர்களின் சேவையை அங்கீ கரிக்கும் வகையில் அரசாணை 354-அய் அமல்படுத்தி, அதன் படி ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா, அரசு வேலை கேட்டு கடந்த 5 ஆண்டுகள் தேசியம் வேலை வழங்கவில்லை. திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *