ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சிறப்பு புத்தக சலுகைகள்

மேட்டூர். ஆக. 16- கருநாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேந்று (15.8.2026) ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.

இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவ தால், காவிரியில் நீர் திறப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. 3 நாட்களாக நீர் வரத்து சரிந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. மேட்டூர் அணையிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீர் 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 81.3 அடியாக உயர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *