திருப்பதி மீது தொடர்ந்து மோசடி செய்திகள் பல்வேறு இணையதளங்களை வைத்து பணம் பறிக்கும் வேலை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருமலை ஆக. 15– திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று (14.8.2026) விடுத்த அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை உருவாக்கி பக்தர்களை சிலர் மோசடி செய்து வருகின்றனர். இணை யங்கள் மட்டுமின்றி, வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களும் திருப்பதி தேவஸ்தா னத்தின் பெயரில் மோசடி செய்து வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டுமே தரிசனம், ஆர்ஜித சேவைகள், விடுதிகளை பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரையோ, சின்னத்தையோ, சமூக வலைதளத்தையோ போலியாக நிர்வகித்து வருபவர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

பக்தர்கள் தேவஸ்தான கைத் தொலைப்பேசி செயலியை உப யோகிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் பொய்யான தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். முன்பின் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *