தமிழ்நாட்டில் முதன் முறையாக கலந்தாய்வில் ‘காணொலி காட்சிப் பதிவு’ வாயிலாக மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்த மாணவர்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 15- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 13.8.2026 அன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் படைவீரர்களின் பிரிவில் 10 எம்.பி.பி.எஸ்., ஒரு பி.டி.எஸ். என மொத்தம் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த இடங்களுக்கு சுமார் 20 முதல் 25 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.

அன்படி, முன்னாள் படைவீரர்களின் பிரிவின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் அனுப் பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 13.8.2026 அன்று காலையில் அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் அந்த மாணவர் பங்கேற்க வில்லை. இதற்கான காரணம் குறித்து கைப்பேசியில் தொடர்பு கொண்டு கலந்தாய்வை நடத்திய மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டதாகவும், அப்போது அந்த மாணவர், தனக்கு அழைப்பு வந்தது தெரியாது என சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் காணொலி காட்சிப் பதிவு வாயிலாக மருத்துவப் படிப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறையை மேற்கொண்டதாகவும், அதில் சம்பந்தப்பட்ட மாணவருக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இடத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. தமிழ்நாட்டு வரலாற்றில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் இந்த நடைமுறை முதன்முறையாக மேற் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *