மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பால் சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு சென்னை மாநகராட்சி அறிவிப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.14- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநக ராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொது மக்கள் மற்றும் சொத்து உரிமை யாளர்களி டமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக் கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.

ஆனால், இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாள்களாகப் பொது மக்களிடமிருந்து தொடர் கோரிக்கைகள் பெறப்பட்டன. இக்கோரிக்கைகளைக் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித் துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, உயர்த்தப் பட்ட வரித்தொகையானது மாற்றிய மைக்கப்படுவதற்கு முன்பு நடை முறையில் இருந்த பழைய அளவிற்கே மீண்டும் கொண்டு வரப்படும். மேலும், மாற்றி யமைக்கப்பட்ட புதிய வரித் தொகையை ஏற்ெகனவே செலுத்திய உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத் திய கூடுதல் தொகை வீணா காது என்றும், அத்தொகை அடுத் தடுத்த அரை யாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மாநகராட்சி யில் வருவாயைப் பெருக்கவும், வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களையவும் மண்டல அளவிலான அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்களின் பரப்பளவு மற்றும் பயன்பாடு சரியாகக் கணக்கிடப்படாமல், குறைவான மதிப்பீட்டில் சொத்துவரி செலுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அத்தகைய சொத்துகளுக்குத் திருத்தி அமைக்கப்பட்ட புதிய சொத்துவரி அறிவிக்கைகள் அனுப்பப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது.

இருப்பினும், திடீரென விதிக்கப்பட்ட இந்த வரி உயர்வால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கட்டட உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர்கள், சரியான கால அவகாசமும் முன்அறிவிப்பும் இன்றி வரி உயர்த்தப்பட்டதாகப் புகார்களை எழுப்பினர். மேலும், நடைமுறையில் உள்ள பொருளாதாரச் சூழலில் இந்த கூடுதல் வரிச் சுமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை அனுப்பி வந்தனர். பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தற்போது சென்னை மாநகராட்சி இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *