பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் தவெக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 14- அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அண்மையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வு, அதற்கு முன்னர் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உட்பட எந்த நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது போன்ற அண்மைக்கால பல அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். நாங்கள் கொடுப்பதை மட்டும் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறுவது செய்திகளை அரசு தணிக்கை செய்வ தற்கு சமமாகும் என தவெக அரசுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல். அரசு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் அரசு சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை அரசோ அல்லது மற்றவர்களோ தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.

ஆகவே, அனைத்து அரசு நிகழ்வு களிலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது துறை அதிகாரிகளுக்கு செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட வேண்டும். அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *