சேத்துப்பட்டு, ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதி உள்ளதாம். இங்கு ஆண்டுதோறும் ‘குருபூஜை’ என்ற பெயரில் விழா நடந்து வருகிறது. அதன் படி நேற்று (12.8.2026) நடந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் பால், சந்தனம், புஷ்ப காவடிகள் எடுத்து வந்தும், பசுக்களுடனும் வந்தும் வழிபட்டனர்.
இந்த விழாவின்போது குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் கேட்டு மண் சோறு சாப்பிட்டு வழிபடுவார் களாம். இதையொட்டி நேற்று பல்வேறு பகுதி களை சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து கோயி லுக்கு வந்துள்ளனர். பின்னர் பிரசாதத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அருகில் உள்ள குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டனர்.
குழந்தை பிறப்பு பற்றிய விழிப்புணர்வு பெருகிய இக்காலத்திலும் பகுத்தறிவின்றி சுய மரியாதைக்கு இழுக்கான இந்த அவலத்திற்கு பெண்கள் ஆளாக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
