கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.8.2026

சிறப்பு புத்தக சலுகைகள்

டெக்கான் கிரானிக்கல், சென்னை :

* எப்.சி.ஆர்.ஏ (FCRA) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு: ஒன்றிய அரசு FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வாய்ப்புள்ளது; காங்கிரஸ், திமுக மசோதாவை கைவிட கோருகின்றன. பிஜேடி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை குழுவுக்கு அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன.

* நீட் தேர்வு, FCRA சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானங்கள்: நீட் தேர்வை ரத்து செய்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் :

* தேசியப் பாடல் இந்தியர்களை ஒன்றிணைக்க வேண்டும்; பிரிக்கக் கூடாது: தலையங்கம்: ‘வந்தே மாதரம்’ உள்ளிட்ட தேசியப் பாடல்களும் தேசியச் சின்னங்களும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்; அவற்றை அரசியல் அல்லது மதப் பிரிவினைக்கு பயன்படுத்தக் கூடாது. அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்ட தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதையை காக்கும் அதேவேளை, நாட்டின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும் என தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ‘லுங்கிவாலா’ விமர்சனம்: பாஜக சுஷ்மிதா தேவுக்கு எதிராக பிரிவிலேஜ் அறிவிக்கை: கேரள CPI(M) எம்.பி. பிரிட்டாஸ், தென்னிந்தியர்களை கலாச்சார ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் ‘லுங்கிவாலா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பி. சுஷ்மிதா தேவுக்கு எதிராக உரிமை மீறல் அறிவிக்கை அளித்தார்.

தி இந்து:

* மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்: காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்தி செயல்படுத்தும் அமைப்பாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

< 28 ஒன்றிய அரசு சுகாதார நிறுவனங்களில் 23,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி: மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள 28 மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் 23,000-க்கும் மேற்பட்ட அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்.

தி டெலிகிராப்:

< ராமர் கோயில் திருட்டு விவகாரம்: கார்கே பேச அனுமதி மறுப்பு: ராமர் கோயில் நிதி/திருட்டு குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மாநிலங்களவைத் தலைவர் அனுமதி மறுத்தார்; ஆகஸ்ட் 4 அன்று இதை எழுப்ப அனுமதித்திருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நீதிபதி யஷ்வந்த் வர்மா பண முறைகேடு விசாரணை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பண முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரித்த குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *