உலகில் புழக்கத்தில் உள்ள மொழிகள் பாதி அளவு அழியும் ஆபத்து! ஆய்வாளர்கள் உறுதி

சிறப்பு புத்தக சலுகைகள்

உலகளவில் தற்சமயம் 7,500 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பொ.ஆ.மு. (கி.மு.) 1 முதல் பொ.ஆ.பி. (கி.பி.) 1 வரையிலான காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகள் மனிதர்களால் பேசப்பட்டு வந்தது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

கணித மாதிரிகளையும் மானு டவியல் ஆய்வு முறைகளையும் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோலோசீன் காலக் கட்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள், பிற்காலப் பேரரசுகளின் விரிவாக்கம், அய்ரோப்பியக் காலனித்துவம் போன்ற காரணங்களால் பல மொழிகள் அழிந்துவிட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கும் அப்பால் வரலாற்று ரீதியாக, பண்டைக் காலத்தில் மனிதர்கள் 30,000 முதல் 75,000-க்கும் மேற்பட்ட மொழி களைப் பேசியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடோடி வேட்டைச் சமூகம், சிறிய குழுக்களின் பரவலான வாழ்க்கை முறை இதற்குத் காரணமாக இருந்தது. எனினும், காலனித்துவ சக்திகளின் மொழிக் கொள்கைகள், மக்கட்தொகை மாற்றங்களால் பல மொழிகள் அழிந்துவிட்டன.

தற்போது புழக்கத்தில் உள்ள மொழிகளில் பாதியளவு அழியும் நிலையில் உள்ளதாகவும், உலகின் 90 சதவீத மக்கள் 10 சதவீத மொழிகளை மட்டுமே பேசுவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மொழி என்பது தொடர்பு கருவி மட்டுமல்ல; அது சமூகங்களின் வரலாறு, அறிவு, நினைவுகளைத் தாங்கி நிற்கும் பெட்டகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *