மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! சட்டமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 8– சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கட்சித் தலைவர்கள் பேசியதாவது:

பழனிசாமி (அதிமுக): கருநாடகாவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்துகள் கேட்க வேண்டும்.

இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ததில், தண்ணீர் இல்லாமல் ஒரு லட்சம் ஏக்கர் வறண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆர்.செல்லசாமி (மார்க்சிஸ்ட்): மேகதாது அணை விவகாரத்தை நாம் சட்டரீதியாக வெல்ல வேண்டுமே தவிர, அவர்களிடம் சென்று கெஞ்சத் தேவையில்லை. அங்குசென்று அவமானம் ஏற்பட்டால், தாங்குவதற்கு தயார் என்று முதலமைச்சர் சொல்கிறார். அது சரியல்ல. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அனைவரின் கருத்துகளை அறிய வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

டி.ராமச்சந்திரன் (இந்தியகம்யூனிஸ்ட்): தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறவேண்டும். அதேபோல், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருநாடகாவில் காங்கிரசும், பாஜவும் ஒன்றாக இருக்கின்றன. இவ்விரு பிரச்சினைகளுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளைக் கேட்டு சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

சவுமியா அன்புமணி (பாமக): அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒற்றுமையான நிலைப்பாட்டை எடுத்து அதை டில்லிக்கு கொண்டு செல்ல வேண்டும். சட்ட முன்னெடுப்புகளையும் கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் 3 வனவிலங்கு சரணாலயங்கள், 12,500 ஏக்கர் காடுகள், அரியவகை உயிரினங்கள் அழிந்துபோகும். எனவே, அங்கே அணைக் கட்டக்கூடாது என்பதுதான் நம் நிலைப்பாடு. இவ்வாறு அவர்கள் பேசினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *