‘வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பேசாத புஸ்வாண பட்ஜெட்!’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

1 Min Read

சென்னை, ஆக.6– வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பேசாத ‘புஸ்வாண பட்ஜெட்’ என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் நேற்று (5.8.2026) தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் எழும்பி உள்ளது.

அந்த வகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–

சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதலமைச்சருக்கு புரியும் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’டாக இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ‘வேஸ்ட் வேஸ்ட்’ என சொல்லும்படி தான் இருக்கிறது.

சுரத்தில்லாத-
புஸ்வாண பட்ஜெட்

அதுமட்டுமல்ல, இது ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களின் மறு பதிப்பு பட்ஜெட் என்றே சொல்லலாம். மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குழப்படி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்கு தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்.

அதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரி மைத்தொகை, வேலையில்லா இளைஞர்க ளுக்கு ரூ.4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்.

மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத-சொன்னதையும் செய்யாத-சுரத்தில்லாத-புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *