தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், கட்டையன்காடு, கோ.சின்னையா – வீரம்மாள் பேராவூரணி நகரம், வீ.கணேசன்- ரெத்தினத்தம்மாள் ஆகியோரின் பெயரனும் கட்டையன்காடு சி.பெரமையன்-முத்துலெட்சுமி ஆகியோரின் மகனுமான கட்டையன்காடு சி.பெ. பிரபுவின் 23ஆம் ஆண்டு (பிறப்பு: 03.12.1982 – இறப்பு: 07.08.2003) நினைவு நாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை சகோதரிகள் கவிதா – கோவிந்தன், இந்திரா – சசிகுமார், மகேஸ்வரி – நடராஜன், ரேவதி – இளையபெருமாள் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
– – – – –
திருவாரூர் க.சி.இராஜாவின் தந்தை க.துரைசாமி-யின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2026) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! காப்பாளர்
